ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், 8–வது நாளாக உண்ணாவிரதம்


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், 8–வது நாளாக உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 26 Aug 2017 12:45 AM IST (Updated: 25 Aug 2017 10:53 PM IST)
t-max-icont-min-icon

முருகன் ஜீவசமாதி அடைவதற்காக நேற்று 8–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜீவசமாதி அடைவதற்காக நேற்று 8–வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தொடர் உண்ணாவிரதத்தால் அவர் மிகவும் சோர்ந்து காணப்படுகிறார்.

இதனால் அவரது உடல்நலம் கருதி அவருக்கு ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டு வருகிறது. நேற்றும் அவருக்கு 2 பாட்டில் ‘குளுக்கோஸ்’ ஏற்றப்பட்டது. உண்ணாவிரதத்தை கைவிடுமாறு ஜெயில் அதிகாரிகள், டாக்டர்கள் வலியுறுத்தியும் முருகன் உணவு உண்ண மறுத்து வருகிறார்.

ஜெயில் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் முருகன் உள்ளார்’’ என்றார்.

Next Story