‘பெரியாரின் தத்துவங்கள் அனைத்து நாட்டினருக்கும் உரியது’
பெரியாரின் தத்துவங்கள் அனைத்து நாட்டினருக்கும் உரியது என ஜெர்மனியில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் கி.வீரமணி கூறினார்.
கொலோன்,
திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தில் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
லண்டன் நகர கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அமெரிக்க பெரியார் பன்னாட்டு மையத்தின் ஜெர்மனி நாட்டு கிளையின் தலைவர் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்புரையாற்றினார்.
பன்னாட்டு மாநாட்டில் ‘கடவுளும் மனிதனும்’ எனும் தந்தை பெரியாரின் தமிழ் உரையினை உள்ளடக்கிய புத்தகத்தினை கொலோன் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சி வல்லுநர் கிளாடியா வெப்பர் ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்’ புத்தகத்தினை கொலோன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஸவென் வொர்ட்மேன் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
மொழிபெயர்க்கப்பட்ட 2 புத்தகங்களையும் பேராசிரியர் உல்ரிக் நிக்லஸ் வெளியிட, அவற்றை ஸ்வீடன் பல்கலைக் கழகப் பேராசிரியர் உப்சல் மற்றும் கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸல்க் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பேராசிரியர் அ.அய்யா சாமி எழுதிய ‘பெரியார் சுய மரியாதை’ எனும் ஆங்கில புத்தகத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி வெளியிட, ஜெர்மனியில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் ராகுலன்-ஒலிவியா ஆகியோர் அதனை பெற்றுக் கொண்டனர்.
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் அமெரிக்க நாட்டு டாக்டர் சித்தானந்தம் சதாசிவம் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார். அமெரிக்க பன்னாட்டு மையத்தின் இயக்குனர் சோம.இளங்கோவன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி மாநாட்டு சிறப்புரையின்போது, “தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் மக்களுக்குப் பயன்பட்டன. ஆனால் பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் அனைத்து நாட்டினருக்கும், ஒட்டு மொத்த மனிதருக்கும் உரியது. பெரியார் சுயமரியாதைத் தத்துவம், உலகளாவிய தத்துவம்” என்று பேசினார்.
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஏராளமானோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story