சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருது அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்
சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருது அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்களுக்கு விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நடந்தது.
விழாவுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விழாவில் கலந்துகொண்டு, சிறந்த டாக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமத் ரேலா, இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன், சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் பாலாஜி உள்பட 12 பேருக்கு விருது, பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
அதேபோன்று சிறப்பாக பணியாற்றிய சென்னை அரும்பாக்கம் அரசு சித்தா மருத்துவமனை டாக்டர் பாலமுருகன் உள்பட 165 பேருக்கு பொன்னாடை அணிவித்து விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன்பியாரே, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக நிர்வாக இயக்குனர் உமாநாத், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story