7 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு


7 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 30 May 2017 11:00 PM (Updated: 30 May 2017 8:24 PM)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 7 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் 7 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 32 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட கலெக்டராக சந்தீப் நந்தூரியும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக என்.வெங்கடேசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி

பொன்னேரி சப்-கலெக்டர் வி.பி.தண்டபாணி, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறை கமிஷனர் மற்றும் தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் பீலா ராஜேஷ், நகர மற்றும் ஊரமைப்பு திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் மாவட்ட கலெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் கே.ராஜாமணி, திருச்சி மாவட்ட கலெக்டராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி, திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் எஸ்.சுரேஷ்குமார்

நிதித்துறை துணைச் செயலாளர் என்.வெங்கடேஷ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நில நிர்வாக இணை கமிஷனர் (நிலம்) எஸ்.சுரேஷ்குமார், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கமிஷனர் மோகன் பியாரே, நில நிர்வாக கமிஷனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பி.டபுள்யூ.சி.டேவிதார், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, சுகாதாரம் மற்றும் குடும்பநல துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

நிதித்துறை கூடுதல் செயலாளர் பூஜா குல்கர்னி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை துணைச் செயலாளர் ஜி.கே.அருண்சுந்தர் தயாளன், கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நீர்த்தேக்க மேம்பாட்டு முகமை செயல் இயக்குனர் ஆர்.ஆனந்தகுமார், நிதித்துறை கூடுதல் செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் எம்.ரவிக்குமார், சர்வே மற்றும் செட்டில்மெண்ட் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கே.நந்தகுமார், சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட மாநில இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி, நிதித்துறை கூடுதல் செயலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

வேளாண்மை துறை கூடுதல் செயலாளர் எம்.கருணாகரன்

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் எஸ்.பழனிசாமி, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி, நில நிர்வாக இணை கமிஷனராக (நிலம்) மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எம்.கருணாகரன், வேளாண்மைத்துறை கூடுதல் செயலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் இ.சரவணவேல் ராஜ், பள்ளி கல்வித்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை சப்-கலெக்டர் எஸ்.பி.அம்ரித், வணிக வரிகள் இணை கமிஷனராக (அமலாக்கம்) மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வி.சாந்தா, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தீரஜ்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வேளாண்மை துறை சிறப்பு செயலாளர் வி.சந்திரசேகரன், தமிழ்நாடு நீர்நிலை மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (கல்வி) மந்திரி கோவிந்தராவ், சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (பணிகள்) மாற்றப்பட்டுள்ளார்.

போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே, தமிழ்நாடு நகர நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர்

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் டி.ஆனந்த், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குனராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தேவகோட்டை சப்-கலெக் டர் அல்பி ஜான் வர்கிஸ், தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிக வரிகள் இணை கமிஷனர் (அமலாக்கம்) எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கே.எஸ்.கந்தசாமி, சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக (கல்வி) நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக பாதுகாப்பு திட்டங்கள் இயக்குனர் சி.என்.மகேஷ்வரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரான நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் (வடக்கு) பிரவீண் பி.நாயர், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story