‘தினத்தந்தி’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை இன்றுடன் நிறைவு
‘தினத்தந்தி’ மற்றும் ‘வசந்த் அன் கோ’ இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி-விற்பனை இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.
சென்னை,
கண்காட்சியில் முன்னணி நிறுவனங்களான சோனி, சாம்சங், எல்.ஜி., பானசோனிக், ஹையர், ஓ-ஜெனரல், கோத்ரேஜ், பட்டர்பிளை, பிரீத்தி, வேர்ல்பூல், ஐ.எப்.பி. உள்பட பல்வேறு நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி-விற்பனையை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
பிரிட்ஜ், ஏ.சி.
கண்காட்சியில் பல்வேறு விதமான அளவுகளில் டி.வி.க்களும், ஏராளமான டிசைன்களில் பிரிட்ஜ் மற்றும் ஏ.சி.க்களும், வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் வாஷிங்மெஷின்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல் 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
எல்.இ.டி. டி.வி.க்கள் ரூ.5 ஆயிரத்து 990 முதல் ரூ.11 லட்சம் வரையிலும் (86 அங்குலம்), வாஷிங் மெஷின்கள் ரூ.4 ஆயிரத்து 990 முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரையிலும் (21.5 கிலோ), பிரிட்ஜூகள் ரூ.7 ஆயிரத்து 990 முதல் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் வரையிலும் (1,000 லிட்டர்), ஏ.சி.கள் ரூ.18 ஆயிரத்து 990 முதல் ரூ.96 ஆயிரம் வரையிலும் கிடைக்கின்றன.
தற்போது கோடைக்காலம் என்பதால் ஏ.சி.க்களை வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான டிசைன்களில் அவர்களின் மனதை கவரும் விதமாக ஏ.சி.க்களை ஒவ்வொரு நிறுவனங்களும் அடுக்கி வைத்துள்ளன.
‘கியூ எல்.இ.டி. டி.வி.’
வாடிக்கையாளர்களின் எண்ணத்துக்கு ஏற்றாற்போல் காம்போ ஆபர், சிறப்பு தள்ளுபடி, கூடுதல் தள்ளுபடி என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏ.சி.க்களை போலவே தரமான முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள் மிகக்குறைவான அதிரடி விலையில் கிடைக்கிறது.
கண்காட்சியில் இடம் பெற்றுள்ள சாம்சங் நிறுவனத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள ‘கியூ எல்.இ.டி. டி.வி.’யை புதிதாக அறிமுகம் செய்துள்ளனர். இந்த எல்.இ.டி. டி.வி.யுடன் ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள சாம்சங் செல்போன் வழங்கப்படுகிறது.
அதேபோல் ஒரு டன் போர்ட்டபிள் ஏ.சி.யும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏ.சி.யின் விலை ரூ.24 ஆயிரத்து 990 மட்டுமே. இந்த ஏ.சி.யை எங்கு வேண்டும் என்றாலும் எடுத்து சென்று பயன்படுத்த முடியும். சுவரில் பொருத்தும் செலவு மிச்சம்.
பர்னிச்சர் பொருட்கள்
வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் ஏராளமான டிசைன்களில் பர்னிச்சர் பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் பர்னிச்சர் பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வகையில் சிறப்பு தள்ளுபடி விலையில் பர்னிச்சர் விற்பனை செய்யப்படுகிறது.
கண்காட்சி-விற்பனையில் கலந்து கொண்டு பொருட்களை வாங்கிய பவானி என்ற பெண் கூறும்போது, ‘பொருட்களை நேரடியாக வந்து பார்த்து அதன் தரம் மற்றும் செயல்பாடுகளை அந்தந்த நிறுவனத்தின் நிபுணர்கள் விளக்கி கூறியது பயனுள்ளதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் நாங்கள் நினைத்து வந்த பட்ஜெட்டுக்குள் பர்னிச்சர் மற்றும் பிரிட்ஜ் வாங்கி இருக்கிறோம். சந்தோஷமாக இருக்கிறது’ என்றார்.