பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற வேண்டியவர்கள் பட்டியல் பன்னீர் செல்வம் ஆலோசனை

இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற வேண்டியர்கள் பட்டியலை பன்னீர் செல்வம் அணி தயரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை,
அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்று சென்னையில் தலைமை கழகத்தில் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் விதித்த நிபந்தனைகளாலும், அமைச்சர்களின் விமர்சனங்களாலும் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. இதனால் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது கிரீன்வேஸ் இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை நடத்திவருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் மதுசூதனன், மைத்ரேயன் கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அம்மா அணியுடன் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற வேண்டியவர்கள் பட்டியலை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனைக்குபின்னர் பேச்சுவார்த்தை குழு குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story