அந்நிய செலாவணி மோசடி வழக்கு 19, 20 ல் தினகரன் ஆஜராக உத்தரவு


அந்நிய செலாவணி மோசடி வழக்கு 19, 20 ல் தினகரன் ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 13 April 2017 12:23 PM IST (Updated: 13 April 2017 12:22 PM IST)
t-max-icont-min-icon

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 19, 20 இல் தினகரன் ஆஜராக உத்தரவு;19 ஆம் தேதி ஒரு வழக்கும், 20 தேதி மற்றொரு வழக்கும் விசாரிக்கப்படும்

சென்னை


1995, 1996-ம் ஆண்டுகளில் டி.டி.வி.தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்தது. இதையடுத்து, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அமலாக்கத்துறை அபராதம் விதித்தது.

இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்நிய செலாவணி மோசடி வழக்கில் 19, 20 இல் தினகரன் ஆஜராக உத்தரவு பிறபிக்கபட்டது.;19 ஆம் தேதி ஒரு வழக்கும், 20 தேதி மற்றொரு வழக்கும் விசாரிக்கப்படும் என கூறபட்டது.

Next Story