சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கு, ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை.


சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கு, ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை.
x
தினத்தந்தி 21 March 2017 4:43 PM IST (Updated: 21 March 2017 4:43 PM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜுக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை

சென்னை காவல் ஆணையர் ஜார்ஜுக்காக ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் வெங்கட்ரமணி மன்னிப்புகேட்டார். ஐகோர்ட்டில் ஜார்ஜ் ஆஜராவார் என்று நீதிபதியிடம் அரசு வக்கீல் உறுதிமொழி அளித்திருந்தார். தலைமை நீதிபதியிடம் ஆணையர் ஜார்ஜ் மேல்முறையீடு செய்து ஆஜராக விலக்கு பெற்றார்.

இது குறித்து நீதி பதி கூறியதாவது:-

சென்னை காவல் ஆணையர் ஜார்ஜுக்கு பதிலாக காவல் அதிகாரிகள் பலர் ஆஜராவதால் செலவு அதிகமாகிறது.சென்னை காவல் ஆணையர் மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய முடியும்.சென்னை காவல் ஆணையர் ஆஜராவார் என்ற உத்தரவாதத்தை நிறைவேற்றாதது குறித்து வழக்கறிஞர் வெங்கட்ராமணியிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.சென்னை காவல் ஆணையர் மார்ச் 22ஆம் தேதி ஆஜராவார் என உத்தரவாதம் அளித்தீர்கள்: நீதிபதி கிருபாகரன் வழக்கறிஞர் வெங்கட்ராமணியிடம் கேள்வி எழுப்பினார்.

Next Story