‘நீட்’ தேர்வு விவகாரம்: தி.மு.க. மாணவர் அணி மறியல் போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தி.மு.க. மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவர் அணி செயலாளர் இள.புகழேந்தி தலைமை தாங்கினார்.
சென்னை,
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:–
* ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிவீதியாக, வீடுவீடாக சென்று தி.மு.க. மாநில மாணவர் அணியின் சார்பில் தீவிர பிரசாரம் செய்வது.
* ‘நீட்’ தேர்வு குறித்த சட்டமுன்வடிவை நிறைவேற்றினாலும், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற உரிய நடவடிக்கை எடுத்திடாமல், இரட்டை வேடம் போட்டு, தமிழக அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது. இதனை கண்டித்து, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆணையை பெற்று, தி.மு.க. மாணவர் அணி விரைவில் மாணவர்திரள் மறியல் போராட்டத்தினை நடத்துவது.
* கடந்த 10 மாதங்களாக அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடத்திற்கு எவரையும் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளதால், மாணவர்கள் பட்டம் பெறாமல் உள்ளனர். பல்கலைக்கழக மாணவர் எண்ணத்தை பிரதிபலிக்கும் வண்ணம், உரிய விசாரணை நடத்திட மத்திய அரசை வலியுறுத்துதல். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.