தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 8 March 2017 11:08 PM IST (Updated: 8 March 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

நீட் தேர்வு விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினோம்-. நீட்தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம்-. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது குறித்து தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story