மோசமான நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் இந்திய மருத்துவக் கவுன்சில்


மோசமான நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் இந்திய மருத்துவக் கவுன்சில்
x
தினத்தந்தி 7 March 2017 11:08 AM IST (Updated: 7 March 2017 11:38 AM IST)
t-max-icont-min-icon

மோசமான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் என இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5–ந் தேதி இரவு மரணம் அடைந்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ஜெயலலிதா தாக்கப்பட்டதாகவும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது அவரை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் இதை தமிழக அரசு மறுத்தது.

இந்த பிரச்சினை தொடர்பாக முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நாளை (புதன்கிழமை) உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி டாக்டர்களின் அறிக்கையை வெளியிட்டு தமிழக அரசு நேற்று விளக்கம் அளித்து உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
ஜெயலலிதா தாக்கப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று  இந்திய மருத்துவக் கவுன்சில் விளக்கம் அளித்தது
இந்திய மருத்துவக்கவுன்சில் மாநிலத்தலைவர் ரவிசங்கர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம்கூறியதாவது :-


மோசமான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் பொய் சொல்வார்களா.சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை குணப்படுத்தி அனுப்புவதே மருத்துவர்களின் நோக்கம்.சிகிச்சைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.ஜெயலலிதாவிற்கு 31 சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் அதில் தவறு ஏற்படுமா.

ஒரு உயிரைக்காப்பற்றத்தான் நாங்கள் முயற்சி செய்வோம், மோசமான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவின் உயிரைக்காக்கவும் 75 நாட்களாக போராடினோம். உலகத்தரத்துடன் கூடிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்றாலும் அவர் உயிரிழந்து விட்டார். இது நமக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும்.

யாரையும் பார்க்க விடாதது ஏன் என்பது பற்றியோ, சிசிடிவி கேமரா இல்லை என்பது பற்றியோ தங்களால் விளக்கம் தரமுடியாது என்று கூறினார்.

Next Story