மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம்: நடிகர் ராமராஜன் பேச்சு


மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம்:  நடிகர் ராமராஜன் பேச்சு
x
தினத்தந்தி 12 Feb 2017 6:26 AM (Updated: 12 Feb 2017 6:26 AM)
t-max-icont-min-icon

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம் என நடிகர் ராமராஜன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் எம்.பி. மற்றும் நடிகரான ராமராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருண் பாண்டியன் மற்றும் நடிகர் தியாகு ஆகியோர் தங்களது ஆதரவினை நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராமராஜன், மக்களால் அடையாளம் காணப்பட்டவர் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்.  மக்களுக்கு தெரியாமல் அரசியலில் எதுவும் நடக்காது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு உடனடி நடவடிக்கை எடுத்தவர் முதல் அமைச்சர் பன்னீர் செல்வம்.  மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் பன்னீர் செல்வம்.  அவர் முதல் அமைச்சராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story