”3 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு”கூவத்தூரில் இருந்து சென்னை புறப்பட்டார் சசிகலா


”3 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு”கூவத்தூரில் இருந்து சென்னை புறப்பட்டார் சசிகலா
x
தினத்தந்தி 11 Feb 2017 7:48 PM IST (Updated: 11 Feb 2017 7:48 PM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏக்களுடன் 3 மணி நேரம் ஆலோசனைக்கு பிறகு கூவத்தூரில் இருந்து சசிகலா சென்னை புறப்பட்டு சென்றார்.

சென்னை,

கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர்.  அவர்களை சந்திப்பதற்காக அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா கூவத்தூர் சென்றார். அங்கு தனது ஆதரவு  எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். சுமார் 3 மணி நேரம் எம்.எல்.ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சசிகலா சென்னை புறப்பட்டார். மேலும் கவர்னரிடம் இருந்து அழைப்பு எதுவும் வராததால் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து நட்சத்திர விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story