ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் கவர்னர் மாளிகையிலிருந்து புறப்பட்டார் சசிகலா
கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் கவர்னர் மாளிகையிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா புறப்பட்டு சென்றார்.
சென்னை,
அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா மெரீனாவில் உள்ள மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவரது வருகையினை அடுத்து மெரீனாவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பட்டியலை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவதற்காக கவர்னர் மாளிகைக்கு சசிகலா புறப்பட்டு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். கவர்னரிடம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை வழங்கினார். சசிகலாவுடன் திண்டுக்கல் சீனிவாசன்,எடப்பாடிபழனிசாமி,தங்கமணி,பாண்டியராஜன்,ஜெயக்குமார்,அன்பழகன்,உள்ளிட்ட 10 அமைச்சர்கள் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் கவர்னர் மாளிகையிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போயஸ்கார்டனுக்கு புறப்பட்டு சென்றார். சுமார் 30 நிமிடங்கள் கவர்னருடன் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
Next Story