ஜெயலலிதா மரணமடைந்ததும் சசிகலா, உறவினர்கள் கண்ணீர்விடவில்லை - பி.எச்.பாண்டியன்
ஜெயலலிதா மரணமடைந்ததும் சசிகலா, உறவினர்கள் கண்ணீர்விடவில்லை எனமுன்னாள் சபாநாயக்ர் பி. எச்.பாண்டியன் கூறினார்.
சென்னை
சென்னை அண்ணாநகர் இல்லத்தில் முன்னாள் சபாநாயகரும், அ.தி.மு.க மூத்த தலைவருமான பி.எச் பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா வீட்டில் ஏதோ வாக்குவாதம் நடந்து மன அழுத்தத்தால் கீழே விழுந்துள்ளார். தூக்கிவிடக் கூட ஆளில்லாமல் தவித்துள்ளார் ஜெயலலிதா. இந்த தகவல் மறுநாள் பத்திரிகைகளில் வந்தது. நான் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். 2வது மாடியில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு அந்த தளத்தில் அதே வரிசையில் டாக்டர்களுக்கு என்று ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் அமர்ந்து கொண்டு டாக்டர்களிடம் விவரம் கேட்க முனைந்தேன். விவரம் சொல்ல யாருமே இல்லை.
ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள், அம்மா நலமாக இருக்கிறார், சீக்கிரம் வருவார் என்று கூறினர். அதை நம்பி வீடு திரும்பினேன். பல நாட்கள் நானும் அப்பல்லோ சென்றேன். அங்கே அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் அமர்ந்து செய்திகளை பற்றி விவாதிப்போம். ஆனால் எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரம் சொல்லப்படவில்லை.
ஜெயலலிதா மரணமடைந்ததும் சசிகலா, உறவினர்கள் கண்ணீர்விடவில்லை. டிச.5 இரவு அப்பல்லோவில் ஜேம்ஸ்பாண்ட் கோட்டுடன் சசிகலா, உறவினர்கள் ஆதிக்கம்.
ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடலை சுற்றி மன்னார்குடி கோஷ்டி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.
சசிகலா குடும்பத்தை பற்றி ஜெயலலிதாவிடம் நேரில் நான் எடுத்து கூறினேன். அப்போது நான் பார்த்து கொள்கிறேன் என ஜெயலலிதா கூறினார்.

Next Story