தமிழ் பணி அறக்கட்டளை சார்பில் தமிழ் முழக்க தெரு பிரசாரம் சி.பா.ஆதித்தனார் சிலை அருகே தொடக்கம்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு தமிழ் பணி அறக்கட்டளை மற்றும் தமிழ்த்தாய் கோவில் குழுவினர் நேற்று மாலை குவிந்தனர்.
சென்னை,
குழுவின் தலைவர் கவிஞர் கலையரசன் தலைமையில் இணை தலைவர்கள் கவிஞர் எடையூர் நாகராசன், அய்யாபிள்ளை, துணை செயலாளர் கவிஞர் எம்.சக்திவேல் என்கிற குறள்நதி உள்பட நிர்வாகிகள் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ‘‘தெரு எங்கும் தமிழ் முழக்கம்’’ என்ற பெயரில் பிரசார பயணத்தை தொடங்கினர். இதனை கவிஞர் சிந்தைவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரசார பயணம் குறித்து குழுவின் தலைவர் கவிஞர் கலையரசன் கூறும்போது, ‘ தமிழ்த்தாய்க்கு கோவில் கட்டுதல், தமிழ் வழிக்கல்வி, தமிழில் பெயர் பலகை வைத்தல், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுதல், தமிழில் கையெழுத்திடுதல் ஆகிய 5 முழக்கங்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஓராண்டு இந்த பிரசார பயணம் நடைபெறும். பழவேற்காடு சடையங்குளம் பகுதியில் 10 கிரவுண்ட் நிலத்தில் 192 உயரத்துக்கு தமிழ்த்தாய் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’ என்றார்.