புனேயில் பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்பு


புனேயில் பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 8 Jan 2017 11:00 PM (Updated: 8 Jan 2017 10:39 PM)
t-max-icont-min-icon

புனேயில், பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். சாக்கடைக்குள் சென்ற சிறுவன் புனே ஆம்பில்ஒடா, தாண்டேக்கர் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, பந்து

புனே,

புனேயில், பாதாள சாக்கடையில் விழுந்த சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான்.

சாக்கடைக்குள் சென்ற சிறுவன்

புனே ஆம்பில்ஒடா, தாண்டேக்கர் மேம்பாலம் அருகில் நேற்று முன்தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, பந்து மேம்பாலத்தின் கீழே உள்ள பாதாள சாக்கடைக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து பந்தை எடுக்க பாதாள சாக்கடைக்குள் சென்ற சிறுவன் கணேஷ் சந்தானே(வயது14) மாயமானான்.

இதையடுத்து பாதாள சாக்கடை குழாயை உடைத்தும், வலை கட்டியும் சிறுவனை தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சியினர் மற்றும் போலீசார் தீவிரமாக தேடினர். சிறுவனை தேடும் பணி நேற்று விடிய விடிய நடந்தது. எனினும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை கசபா பேட் பம்பிங் ஸ்டேசன் சாக்கடை பகுதியில் சிறுவனின் உடல் மிதந்து வந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் 30 அடி ஆழ பம்பிங் ஸ்டேசன் சாக்கடைக்குள் கயிறு கட்டி உள்ளே இறங்கினர். அவர்கள் சிறுவனின் உடலை கயிற்றை கட்டி மேலே தூக்கி வந்தனர். பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பாதாள சாக்கடைக்குள் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் புனேயில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story