2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள்


2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகள்
x

குடியாத்தத்தில் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற கலைத்திருவிழா போட்டிகளை அமலுவிஜயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வேலூர்

குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. குடியாத்தம் வட்டாரத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 59 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் 33 வகையான கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்றனர்.

தொடக்க விழாவுக்கு பரதராமி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.லதா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கே.அருள்லிங்கம், மேற்பார்வையாளர் டி.வெண்ணிலா, தலைமை ஆசிரியர்கள் டி.ஜெகநாதன், எம்.மகேந்திரன், என்.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுப்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.அகிலா வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் டி.ஞானவேல் விளக்க உரையாற்றினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.தயாளன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் எம்.எஸ்.அமர்நாத், ஜி.எஸ்.அரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜாவீத்அகமது, ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.சக்திதாசன், பள்ளி மேலாண்மை குழுதலைவர் வி.கலைவாணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story