தூய்மை பணியை மேற்கொள்ள அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் - கல்வித்துறை தகவல்
தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது.
சென்னை,
அரசு பள்ளிகளை தூய்மையாக வைத்திருந்தால், மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருப்பார்கள் என்ற வகையில், கல்வித்துறை தூய்மை பணிக்காக பள்ளி ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க இருக்கிறது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 31 ஆயிரத்து 210 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.6 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை கொண்டு அரசு பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் இந்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு இருக்கிறதா? என்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Related Tags :
Next Story