வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராயம் பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராயம் பறிமுதல்
x

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சுப்பராயன் கோவில் வட்டம் பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கலால் உதவி ஆணையர் பானுமதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், தாசில்தார் சம்பத் தலைமையிலான வருவாய் துறையினர் சுப்பராயன் கோவில் வட்டம் பகுதியில் உள்ள சில வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வசந்தா, மோகன் ஆகியோரின் வீட்டில் லாரி டீயூப்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அங்கேயே கொட்டி தீ வைத்து அழித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட அரசு மதுபான பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மீது மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story