200 துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்


200 துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x

வருவாய்த்துறையில் 200 துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


வருவாய்த்துறையில் 200 துணை கலெக்டர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பணியிடங்கள்

இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் தரப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் வருவாய் துறையில் மாவட்ட அளவில் துணை கலெக்டர்கள் பணியிடங்கள் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ளன. கடந்த 2021-2022 வரை 117 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போதைய நிலையில் 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது. மாவட்ட அளவில் கோட்டாட்சியர், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் துறை நல அலுவலர்கள், கலால் உதவிஆணையர்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உதவிஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

பணிமூப்பு பட்டியல்

இந்த பணி இடங்களுக்கு பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்படாத நிலையில் அடுத்த நிலைகளில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், பதவிஉயர்வு கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே தமிழக அரசின் வருவாய்த்துறை உயர் அலுவலர்கள் இதுகுறித்து உடனடியாக உரிய கலந்தாய்வு செய்து துணை கலெக்டர் பணியிடங்களுக்கு பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story