200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்கள்
200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
காரியாபட்டி,
200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
வளைகாப்பு விழா
நரிக்குடி மற்றும் திருச்சுழியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப்பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டும் முக்கியமான காரணிகளாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
பொருளாதார நிலை
படிப்பு, எழுத்தறிவு பெற்று இருக்கின்ற சமுதாயம் தான் பிற்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளுக்கு சென்று நல்ல நிலைக்கு வருகிறார்கள். இதனால் பொருளாதார நிலை உயர்கிறது. திருச்சுழி தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நிறைவேற்றி தந்துள்ளது தமிழக அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொறுப்பு) ஹேமலதா, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் (பொறுப்பு) வித்யா, நரிக்குடி ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர் காளீஸ்வரி சமயவேலு, திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர் பொன்னுதம்பி, மாவட்ட கவுன்சிலர் போஸ்த்தேவர், கமலிபாரதி, ஒன்றிய செயலாளர்கள் நரிக்குடி கண்ணன், சந்தனப்பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் படி விருதுநகர் தி.மு.க. வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக இல்லந்தோறும் தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறில் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஆவியூர் சிதம்பர பாரதி, அரசகுளம் சேகர், கார்த்திகேயன், அய்யனார், திலீபன் மஞ்சுநாதன், ஜெகன் பால்பாண்டி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (எ) ஜெயச்சந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், பேரூர் செயலாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.