வாலிபருக்கு 20 ஆண்டு சிறை


வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்

திட்டக்குடி அருகே கிளிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி மகன் ஜோதிவேல் (வயது 28). இவர் கடந்த 8.5.21 அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை வாயை பொத்தி அங்குள்ள கரும்புதோட்டத்துக்கு கடத்தி சென்றுபாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது பற்றி அறிந்த சிறுமியின் தாய் விருத்தாசலம் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோதிவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.

20 ஆண்டு சிறை

அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ஜோதிவேல் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் நலவாழ்வு நிதியில் இருந்து சமூக பாதுகாப்புத்துறை மூலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story