தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்


தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 30 Nov 2022 1:00 AM IST (Updated: 30 Nov 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் விரைவு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அம்மாபட்டிசாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது31). இவர் மோகனூர் அருகே சொட்டையன்புதூர் பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந் தேதி 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதன் தொடர்ச்சியாக சிறுமி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து தாயார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று விட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் மோகனூர் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.

20 ஆண்டுகள் ஜெயில்

இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி சுரேஷூக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட் சுரேஷ் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.


Next Story