2 பேருக்கு 20 ஆண்டு சிறை


2 பேருக்கு 20 ஆண்டு சிறை
x

பாலியல் ெதால்லை அளித்த 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசியை சேர்ந்தவர் முத்து சோனை (வயது 26). இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவருக்கு சுப்புராஜ் (25) உடந்தையாக இருந்துள்ளார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முத்து சோனை மற்றும் உடந்தையாக இருந்த சுப்புராஜ் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். முத்து சோனைக்கு ரூ.12 ஆயிரம் அபராதமும், சுப்புராஜீக்கு ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story