ஓட்டலில் கெட்டுப்போன 20 கிலோ சிக்கன் பறிமுதல்
குற்றாலத்தில் ஓட்டலில் கெட்டுப்போன 20 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் உத்தரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சசி தீபா ஆலோசனையின் பேரிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று குற்றாலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ சிக்கன் கெட்டு போய் இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் அதில் 4 கிலோ பிரியாணி மற்றும் நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் வெகு நேரத்திற்கு முன்பு சமைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தார். பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அங்கு இருந்ததை பறிமுதல் செய்தார். இதற்காக அந்த ஓட்டலுக்கு ரூ.6,000 அபராதமாக விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story