20 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு


20 விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி பகுதியில் 20 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடி பகுதியில் 20 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சதுர்த்தி விழா

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டு வந்தனர். இந்த சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

பொறையாறு, காட்டுச்சேரி ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பொறையாறு கடைத்தெருவில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தரங்கம்பாடி கடற்கரைக்கு கொண்டு வந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.


Next Story