2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருநெல்வேலி
ராதாபுரம் அருகே உள்ள காரியாகுளத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதேவ் வசந்த் (வயது 23), கண்ணன் (23). இவர்கள் மீது ராதாபுரம் போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதனால் இவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று ஸ்ரீதேவ் வசந்த், கண்ணன் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ நேற்று பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
Related Tags :
Next Story