காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது


காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவிலில் வழிப்பறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ரம்ஜான்தைக்காலை சேர்ந்தவர் காதர் மொய்தீன் மனைவி ஜன்னத் பிவி (வயது 70). சம்பவத்தன்று இவர், அந்த பகுதியில் நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த 2 பேர், ஜன்னத் பிவி அணிந்திருந்த 10 கிராம் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினர். அப்போது அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால், அவர்கள் செயினை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுமன்னார் கோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார், நகையை பறித்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், முட்டம் பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், உத்திரச்சோலை பகுதியை சேர்ந்த ரஜாக்நகரை சேர்ந்த தாஜூதீன் ( 25), ஷாஜகான் (22) என்பதும், ஜன்னத்பிவியிடம் நகையை பறித்துவிட்டு, பின்னர் அங்கேயே போட்டு சென்ற வழக்கில் தேடப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story