கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x

கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான போலீசார் அறந்தாங்கி-பேராவூரணி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டீக்கடையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாடிமுத்து மகன் சரவணன் (வயது 23), அறந்தாங்கி எழில் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வைத்தீஸ்வரன் (19) ஆகிய இருவரும் கஞ்சா பொட்டலங்களை விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் செல்ேபான், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story