போலீஸ் தேடிய 2 பேர் கைது
திருவையாறு அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
திருவையாறு;
திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பிரேம்(வயது31) வெட்டிக்ெகாலை செய்யப்பட்டார். இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேரை தேடிவந்தனர்.இந்த நிலையில் திருவையாறு அருகே தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் பிரேம் கொலை வழக்கில் தொடர்புடைய விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.