வீரர்களின் நினைவாக 2 வாலிபர்கள் நடைபயணம்


வீரர்களின் நினைவாக 2 வாலிபர்கள் நடைபயணம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 2 வாலிபர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

ராமநாதபுரம்

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினமாக கொண்டாடப்பட்டது. ஒருபுறம் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த நாளில் கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். உயிரிழந்த வீரர்களின் தியாக உணர்வை போற்றும் வகையில் வாலிபர்கள் 2 பேர் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர். ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த ஹபிஸ்ரகுமான், வினோத்குமார் ஆகியோர் 40 வீரர்களின் நினைவாக 40 மரக்கன்றுகளுடன் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு நடைபயணமாக ராமநாதபுரம் வந்தனர். உயிரிழந்த வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட்டு அவர்களின் தியாகத்தை நினைவுகூற உள்ளதாக தெரிவித்தனர். மேலும், அவர்கள் இருவரும் கூறியதாவது:- உலகம் முழுவதும் காதலர் தினமாக இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு இந்தியனுக்கும் இது கருப்புதினமாகும். ஏனெனில் புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக 40 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதியை கருப்புதினமாக அனுசரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story