சேந்தமங்கலம் அருகே கல்லூரி விரிவுரையாளரிடம் நகை, பணம் பறிப்பு 2 வாலிபர்கள் கைது


சேந்தமங்கலம் அருகே கல்லூரி விரிவுரையாளரிடம் நகை, பணம் பறிப்பு 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 12:30 AM IST (Updated: 26 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே கல்லூரி விரிவுரையாளரிடம் நகை, பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

நாமக்கல்

சேந்தமங்கலம்:

புதுச்சத்திரம் ஒன்றியம் வீரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 34). கல்லூரி விரிவுரையாளர். இவருக்கும் சேந்தமங்கலம் ஜங்களாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான விக்னேஸ்வரன் என்பவருக்கும் ஓரினச்சேர்க்கை தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு சேந்தமங்கலம் அருகே உள்ள சின்னகுளம் பகுதிக்கு வருமாறு கனகராஜை, விக்னேஸ்வரன் அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து கனகராஜ் அங்கு செல்லவே விக்னேஸ்வரன், அவருடைய நண்பர் மலைவேப்பன் குட்டையை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் சின்னகுளம் பகுதியில் காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து கனகராஜை மிரட்டி அவர் அணிந்திருந்த 1½ பவுன் நகை, செல்போனில் `கூகுள் பே' செயலி மூலம் ரூ.97 ஆயிரத்து 750-ஐ பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கனகராஜ் சேந்தமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார், விக்னேஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story