டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
திங்கள்சந்தை:
திக்கணங்கோடு அருகே வாளோடு பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபாலன் (வயது30). கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந்தேதி மேக்கோடு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (38) என்பவர் ஓட்டி வந்த மினி டெம்போ திடீரென வேணுகோபாலனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வேணுகோபால் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு இரணியல் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி அமிர்தீன், விபத்தை ஏற்படுத்திய டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் கோபிநாத்துக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக ஸ்ரீதேவி வாதாடினார்.