அரசு ஆஸ்பத்திரி காவலாளியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை


அரசு ஆஸ்பத்திரி காவலாளியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
x

அரசு ஆஸ்பத்திரி காவலாளியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

அரசு ஆஸ்பத்திரி காவலாளியை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

காவலாளி மீது தாக்குதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் மணஞ்சேரி மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் முருகன் (வயது 36). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருட்டில் ஈடுபட முயன்றார்.

அப்போது அங்கு காவலாளியாக வேலையில் இருந்த கும்பகோணம் பட்டகால் தெருவை சேர்ந்த தேசிங்குராஜா மகன் தியாகராஜன் என்பவர் முருகனை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தியாகராஜனை இடது கண் உள்ளிட்ட இடங்களில் தாக்கினார். இதில் தியாகராஜனுக்கு இடது கண் பார்வை பறிபோனது. இதுகுறித்து தியாகராஜன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை

புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது நீதிபதி பாரதிதாசன், காவலாளியை தாக்கி பார்வை இழப்பு ஏற்படுத்திய முருகனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story