வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயம்


வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயம்
x

வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் மாயமானார்கள்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 63). இவரது மகள் சந்தியா(27). இவருக்கும், சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் மகள் இருக்கிறாள். சம்பவத்தன்று சின்னவளையத்தில் இருந்து தேவாமங்கலத்தில் உள்ள தந்தை வீட்டிற்கு சந்தியா வந்துள்ளார். அன்று மாலை வீட்டில் இருந்து கடைவீதிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து தா.பழூர் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதேபோல் தா.பழூர் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா(48). இவரது மகள் வேம்பு(24). இவர் நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் இந்திரா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story