பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்


பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்
x

பெரியபாளையம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

பூண்டி ஒன்றியம், மெய்யூர் ஊராட்சியில் உள்ள வேம்பேடு பகுதியில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் சவுடு மணல் ஏற்றி வருவதாக திருவள்ளூர் துணை தாசில்தார் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது முன்னிலையில் பெரியபாளையம் போலீசார் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பெரியபாளையத்தில் உள்ள வடமதுரை கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சவுடு மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முற்பட்டனர். இதனால் அந்த லாரிகளை ஓட்டி வந்த டிரைவர்கள் நடுரோட்டில் அந்த லாரிகளை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். எனவே, அந்த லாரிகளை போலீசார் சோதனை செய்தபோது அனுமதி இன்றி சவுடு மணல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த 2 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய டிரைவர்களை தேடி வருகின்றனர்.


Next Story