மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது
மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்; டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வடகாடு போலீசார் அருகேயுள்ள புளிச்சங்காடு, கைகாட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரவுண்டானா பகுதியில் டிராக்டர்களில் சாண்டு மண் அள்ளி வந்த 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் டிரைவர்கள் தஞ்சை மாவட்டம் செட்டிகொல்லை நெய்வேலி பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 29), ஆவணம் பெரியநாயகி புரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire