காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

நித்திரவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

நித்திரவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

சொகுசு கார்

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தி விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மங்காடு வழியாக கேரளாவுக்கு சொகுசு காரில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக தனிப்பிரிவு ஏட்டு ஜோசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையில் போலீசார் மங்காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று வேகமாக வந்தது.

2 டன் ேரஷன் அரிசி பறிமுதல்

காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினார். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் போலீசாரை கடந்து சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் தங்களது வாகனத்தில், அந்த காரை விரட்டி சென்றனர். குழிவிளை பகுதியில் காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி சென்றார்.

இதனைதொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் சிறு, சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அரிசியுடன் காரை போலீசார் பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story