2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

குளச்சல்,

குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை குளச்சல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வாணியக்குடி பகுதியில் மீன் கடை அருகில் மறைவான இடத்தில் மூடைகள் கிடந்தன. அவற்றை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருந்தது. 40 மூடைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, வாகனம் மூலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது அந்த ரேஷன் அரிசி மூடைகளை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. ரேஷன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story