2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி

களியக்காவிளை,

குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து காரை சோதனை செய்த போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அரிசியை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story