கால்நடை மருத்துவப் படிப்புக்கு முதல்நாளில் 2 ஆயிரம் பேர் விண்ணப்பம் - 26-ந்தேதி கடைசி நாள்


கால்நடை மருத்துவப் படிப்புக்கு முதல்நாளில் 2 ஆயிரம் பேர் விண்ணப்பம் - 26-ந்தேதி கடைசி நாள்
x

கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில் மட்டும் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

சென்னை:

5½ ஆண்டு கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்புகளில் மொத்தம் 580 இடங்கள் காலியாக இருக்கின்றன. இதில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், தஞ்சாவூர், திருநெல்வேலி, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 100 இடங்களும், சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 80 இடங்களும், தேனி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தலா 40 இடங்களும் வருகின்றன.

மேலும் சென்னை உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்ப கல்லூரியில் உள்ள 40 உணவு தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும், 20 பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும், ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் உள்ள 40 கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கும் என மொத்தம் 680 காலி இடங்கள் இந்த ஆண்டு இருக்கின்றன.

இதற்கான விண்ணப்பப்பதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் தொடங்கி இருக்கிறது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில் மட்டும் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக வருகிற 26-ந்தேதி மாலை 5 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story