ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு


ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
x

பரோலில் வெளியே வந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதியை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள தாழையூத்து செல்வம்நகரை சோந்தவர் சீனித்துரை (வயது 31). இவர் கங்கைகொண்டான் போலீசாரால் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சீனித்துரை தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பரோல் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு கடந்த 25-ந்தேதி பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்த சீனித்துரை கடந்த 29-ந்தேதி சிறைக்கு திரும்பாமல் திடீரென தலைமறைவானார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை சிறை அலுவலர் வினோத் தாழையூத்து போலீசில் புகார் செய்தார்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இன்னோஸ்குமார், சந்திரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சீனித்துரையின் உறவினர்கள், நண்பர்களின் ஊர்களில் முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story