காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழப்பு - விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு சென்ற போது சோகம்...!
சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 2 பேர் உயிரிழந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த சேத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் பாப்பாத்தி அம்மாள்(வயது 70 ).இவரது மகன்கள் அறிவு செல்வன், அன்பு செல்வன்.
இவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.
பாப்பாத்தி அம்மனின் மூத்த மகள் அறிவுச் செல்வனின் மகள் சுசித்ரா(11 ). இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
அதேபோல பாப்பாத்தி அம்மாளின் இரண்டாவது மகன் அன்பு செல்வனின் மகள் சசிரேகா(6). இவரும் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளர்.
இவர்கள் இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் சேத்துக்குளியிலுள்ள தனது பாட்டி பாப்பாத்தி அம்மாளின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று பாப்பாத்தி அம்மாள் தனது பேத்திகள் சுஜித்ரா மற்றும் சசிரேகா ஆகியோருடன் அங்குள்ள காவிரி ஆற்றில் துணி துவைக்க சென்றுள்ளார்.
அப்போது தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவரும் திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.