பாஜகவில் இணைந்த 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்


பாஜகவில் இணைந்த 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
x

பாஜகவில் இணைந்த 2 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை,

`என் மண், என் மக்கள்' என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை 234 தொகுதிகளிலும் மக்களிடம் விளக்கும் வகையில் இந்த நடைபயண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தில் என் மண்-என் மக்கள் நடைபயணத்தின்போது காவல்துறை சீருடை அணிந்து 2 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தஞ்சை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.


Next Story