திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்


திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் கைது - 50 பவுன் நகை பறிமுதல்
x

திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 50 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விஷ்ணுகாஞ்சி, காஞ்சீபுரம் தாலுகா, வாலாஜாபாத் மற்றும் சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவின் பேரில் காஞ்சீபுரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர் மேற்பார்வையில், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த், சிவகாஞ்சி போலீஸ் சப்‌-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றம் நடைபெற்ற இடங்களில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

திருட்டில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வினோத்கண்ணன் (வயது 29) மற்றும் அருண் என்ற பூச்சி இருளப்பன் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து காஞ்சீபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் திருட்டு போன ரூ.20 லட்சம் மதிப்புள்ள 50 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்கள் இருவரும் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.


Next Story