வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தை சேர்ந்தவர் நங்கமுத்து (வயது 25). இவர் கடந்த 10-ந் தேதி பாளையங்கோட்டை அருகே மங்கம்மாள் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 பேர், அவரை வழிமறித்து ஆயுதத்தை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து நங்கமுத்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் வேலன்குளம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெயிலுமுத்து (22), வாகைகுளத்தை சேர்ந்த மகாராஜன் (22) ஆகிய 2 பேரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story