ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது


ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி ேமாசடி வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் ைகது செய்யப்பட்டனர்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் முன்னாள் செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரூ.2.11 கோடி மோசடி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தாலுகா அலுவலகம் எதிரில் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்த உறுப்பினர்கள் பினாமி பெயர்களிலும், இறந்தவர்கள் பெயர்களிலும், நிலங்கள் இல்லாமலும் மோசடியாக ஆவணங்கள் தயார் செய்து ரூ.2.11 கோடிக்கு கடன்கள் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு பல்வேறு தரப்பினரும், கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் அளித்தனர்.

2 பேர் கைது

இதையடுத்து, தென்காசி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் செயலாளர் சொரிமுத்து உள்பட 60 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் செயலாளர் சொரிமுத்து, கடன் பெற்ற முருகன் ஆகியோரை கைது செய்தனர். மற்ற 58 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story