மணல் கடத்திய 2 பேர் கைது
மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டு, டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு, சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் பேரணாம்பட்டு அருகே குண்டல பல்லி கானாற்று பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது குண்டல பல்லி கானாற்றிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத 2 டிராக்டர்களில் மணல் கடத்தி வந்த கள்ளிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோட்டீஸ்வரன் (25), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (26) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான டிராக்டர் உரிமையாளர்கள் கபில், கிளாரன்ஸ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.