புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ஈ.வி.என்.ரோடு முத்துகருப்பணன் வீதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஈரோடு பாரதிநகர் பகுதியை சேர்ந்த அப்துல்லா (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் 200 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்த கோவை மாவட்டம் முத்துகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த சென்னியப்பன் (48) என்பவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 188 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story